டெல்லி பயணத்தில் விஜய்க்கு திடீர் சோதனை ஆதவ் அர்ஜுனா பையில் சிக்கிய மது பாட்டில்
March 14, 2026

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்ற விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சோதனையின் போது விஜய்யின் பையில் கத்தரிக்கோலும் ஆதவ் அர்ஜுனாவின் பையில் உயர் ரக மது பாட்டிலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த பொருட்களை அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்தனர்.
தனி விமானத்தில் ஏறச் சென்ற விஜய்யை மத்திய பாதுகாப்பு படையினர் கீழே இறக்கி மீண்டும் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். இந்த திடீர் சோதனையினால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. சுமார் 40 நிமிட தாமதத்திற்கு பிறகு அதிகாரிகள் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.