மேற்கு ஆசிய போரை முடிவுக்கு கொண்டுவரப்போகும் டொனால்ட் ட்ரம்பின் உள்மனது அழைப்பு

மேற்கு ஆசிய போரை முடிவுக்கு கொண்டுவரப்போகும் டொனால்ட் ட்ரம்பின் உள்மனது அழைப்பு

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போரை தனது உள்மனதின் விருப்பப்படி முடிவுக்கு கொண்டு வரப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை இந்த ரகசியத்தை உடைத்த அவர், தனது உள்ளுணர்வு எப்போது போர் நிறுத்தத்தை சொல்கிறதோ அப்போது இறுதி முடிவெடுக்கப்படும் என்றார். தனிப்பட்ட உணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப்படவுள்ள இந்த நடவடிக்கை உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் மத்திய கிழக்கு பகுதியில் ராணுவ பலத்தை அதிகரிக்க போவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அங்கு கூடுதலாக 2,500 கடற்படை வீரர்களும் மூன்று போர்க்கப்பல்களும் அனுப்பப்படுகின்றன. அமைதி பற்றி பேசினாலும் ராணுவ வலிமையை அதிகரிப்பதன் மூலம் நிலைமை மேலும் பதற்றமடைவதை ட்ரம்பின் இந்த இருவேறு நிலைப்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *