குண்டுமழையிலும் டெல்லியை விட தூய்மையான காற்றை சுவாசிக்கும் ஈரான் மக்கள் பின்னணி என்ன

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்களால் ஈரானின் தலைநகர் டெஹ்ரான் புகைமண்டலமாக காட்சியளித்தாலும், அங்குள்ள காற்றின் தரம் டெல்லியை விட சிறப்பாக இருப்பது உலகையே வியக்க வைத்துள்ளது. போர்க்களமாக மாறியுள்ள டெஹ்ரானில் காற்றின் தரக்குறியீடு (AQI) 50 முதல் 70 வரை மட்டுமே பதிவாகியுள்ளது. ஆனால், எவ்வித நேரடிப் போரும் இல்லாத டெல்லியில் காற்றின் தரம் 150-ஐ கடந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெஹ்ரானின் புவியியல் அமைப்பு மற்றும் அங்கு குறைவான தொழிற்சாலை செயல்பாடுகளே இதற்கு முக்கிய காரணமாகும். டெல்லி இந்தோ-கங்கை சமவெளியில் அமைந்துள்ளதால், அங்குள்ள வாகனப் போக்குவரத்து மற்றும் கட்டுமானப் பணிகளால் வெளியேறும் நச்சுப் புகையை வெளியேற்ற முடியாமல் காற்று மாசு அதிகரிக்கிறது. குண்டுவெடிப்புகளால் ஏற்படும் புகையை விட, டெல்லியின் அன்றாட தொழில்முறை மாசு மிகவும் ஆபத்தானது என்பதை இந்த ஒப்பீடு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.