சிலிண்டர் புக் செய்தும் வரலையா உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணி புகார் கொடுங்க
March 14, 2026

ஈரான்-இஸ்ரேல் மோதலால் வணிக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டாலும், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. தற்காலிக தட்டுப்பாட்டை போக்க உற்பத்தி 30% அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், பதுக்கலைத் தவிர்க்க சிலிண்டர் முன்பதிவுக்கான கால அவகாசம் நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்த சிலிண்டர் டெலிவரி செய்யப்படாவிட்டாலோ அல்லது கூடுதல் கட்டணம் கேட்கப்பட்டாலோ வாடிக்கையாளர்கள் உடனடியாக புகார் அளிக்கலாம். இண்டேன் மற்றும் ஹெச்பி வாடிக்கையாளர்கள் 1800-2333-555 என்ற எண்ணிலும், பாரத் கேஸ் பயனாளர்கள் 1800-22-4344 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். உஜ்வாலா திட்டப் பயனாளர்கள் 1800-266-6696 என்ற எண்ணைப் பயன்படுத்தி தங்களின் புகார்களைப் பதிவு செய்யலாம்.