அசாம் மாநிலத்தின் தலையெழுத்தை மாற்றும் ரூ 47,800 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

அசாம் மாநிலத்தின் தலையெழுத்தை மாற்றும் ரூ 47,800 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் இரண்டு நாட்கள் அசாம் மாநிலத்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ. 47,800 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, சில முக்கிய பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.

இந்தச் சுற்றுப்பயணத்தில் ரயில் பெட்டி பழுதுபார்க்கும் தொழிற்சாலை மற்றும் 6 புதிய மேம்பாலப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பொதுமக்களின் வசதிக்காக 3 புதிய ரயில் சேவைகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். இத்திட்டங்கள் மாநிலத்தின் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *