இந்திய வரலாற்றில் முதல்முறை தலைமை தேர்தல் ஆணையரை நீக்க 193 எம்.பி.க்கள் அதிரடி கையெழுத்து

இந்திய வரலாற்றில் முதல்முறை தலைமை தேர்தல் ஆணையரை நீக்க 193 எம்.பி.க்கள் அதிரடி கையெழுத்து

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் பாரபட்சம் மற்றும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்க எதிர்க்கட்சிகள் களம் இறங்கியுள்ளன. இதற்காக இந்தியா கூட்டணி சார்பில் 130 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 63 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 193 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மான நோட்டீஸ் தயார் செய்யப்பட்டுள்ளது.

வாக்குரிமை பறிப்பு மற்றும் தேர்தல் மோசடி உள்ளிட்ட 7 முக்கிய குற்றச்சாட்டுகள் இந்த நோட்டீஸில் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க தேர்தல் நெருங்கும் சூழலில், ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டால், அது இந்திய ஜனநாயகத்தின் முக்கிய மைல்கல்லாக அமையும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *