வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையே 18 ஆண்டுகால கனவு ரயில் சேவை இன்று முதல் அதிரடியாகத் துவக்கம்

வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையே 18 ஆண்டுகால கனவு ரயில் சேவை இன்று முதல் அதிரடியாகத் துவக்கம்

வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. சென்னை கடற்கரை – பரங்கிமலை இடையே 43 ஜோடி ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் சென்னையின் புறநகர் போக்குவரத்து கட்டமைப்பு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதுடன், பயணிகளின் நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

வெற்றிகரமான சோதனை ஓட்டத்திற்குப் பிறகு இந்த புதிய தடத்தில் ரயில் சேவை முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது. கடற்கரை முதல் வேளச்சேரி மற்றும் பரங்கிமலை வரை பல்வேறு ரயில்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் சென்னை மக்களின் 18 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியுள்ளதால் ரயில் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *