திருச்சியில் நிலவும் கடும் எல்பிஜி தட்டுப்பாட்டால் ஆட்டோ ஓட்டுநர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம்
March 14, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் உலகளவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதன் தாக்கம் திருச்சியிலும் எதிரொலிக்கிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான எல்பிஜி பங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
திருச்சி அரிஸ்டோ பகுதியில் உள்ள பங்குகளில் எரிவாயு நிரப்ப ஓட்டுநர்கள் நான்கு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த தட்டுப்பாட்டால் ஒரு நாள் வருமானம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள் அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண கோரிக்கை விடுத்துள்ளனர்.