நெல் மற்றும் கோதுமைக்கு மாற்றாக பருப்பு வகை சாகுபடிக்கு மாற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெல் மற்றும் கோதுமைக்கு மாற்றாக பருப்பு வகை சாகுபடிக்கு மாற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விவசாயிகள் இனி நெல் மற்றும் கோதுமை சாகுபடியை மட்டும் சார்ந்து இருக்காமல், பருப்பு வகை பயிர்களுக்கு மாற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வட மாநிலங்களில் கோதுமைக்கும், தென் மாநிலங்களில் மற்ற பயிர்களுக்கும் சிறந்த மாற்றாக பருப்பு வகைகளை முன்னிறுத்த வேண்டியது அவசியம் என நீதிபதி சூர்யகாந்த் அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.

பருப்பு சாகுபடிக்கு விவசாயிகளை ஊக்குவிக்க வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. குறிப்பாக, குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் விவசாயிகளின் நலனை உறுதி செய்து, அவர்களை இம்மாற்றத்திற்கு தயார்படுத்த வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *