தேர்தல் கூட்டணியில் பாஜக கொடுக்கும் கடும் நெருக்கடி மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சிகள்
March 14, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீட்டில் கடும் இழுபறி நீடிக்கிறது. முதல்வர் வேட்பாளர் மற்றும் கூட்டணித் தலைமை குறித்து பாஜக இன்னும் தெளிவான முடிவை அறிவிக்காதது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்த பாஜக தயங்குவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
வெற்றி வாய்ப்புள்ள 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கேட்பதால் இருமுறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விஜய்யின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது மார்ச் 16-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இந்த முக்கிய ஆலோசனையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.