மது பாட்டிலுக்கு கூடுதல் 10 ரூபாய் கேட்டதால் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
March 14, 2026

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்த ஆத்திரத்தில், ரகு என்ற கூலித் தொழிலாளி அரசுப் பேருந்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தார். இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். மதுபோதையில் இருந்த அந்த நபர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரையும் தாக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் காவல்துறையினர், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த அந்த நபரை உடனடியாகக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். நல்வாய்ப்பாகப் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.