சிஎஸ்கே அணிக்கு சிக்கல் தரும் ரஜினிகாந்த் பட பாடல்கள் மற்றும் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சன் டிவி அதிரடி வழக்கு
March 14, 2026

ஐபிஎல் 2026 தொடருக்கான புதிய ஜெர்சி அறிமுக வீடியோவில் ‘ஜெயிலர்’ மற்றும் ‘கூலி’ பட பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது சன் டிவி வழக்கு தொடர்ந்துள்ளது. வணிக ரீதியான லாபத்திற்காக தங்களின் காப்புரிமை பெற்ற இசை மற்றும் வசனங்களை பயன்படுத்தியதால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில், சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கப்பட்டுவிட்டதாக சிஎஸ்கே தரப்பு தெரிவித்தது. இனிவரும் காலங்களில் உரிய அனுமதியின்றி இது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என சிஎஸ்கே உறுதியளித்த நிலையில், இது குறித்த பிரமாணப் பத்திரத்தை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.