ஓமானில் பயங்கர ட்ரோன் தாக்குதல் பலியான 2 இந்தியர்கள் மற்றும் 10 பேர் காயம்
March 13, 2026

ஓமனின் சோஹர் மாகாணத்தில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த மேலும் பத்து இந்தியர்களில் ஐந்து பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வருவது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் தூதரகம் ஓமன் அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.