தீபிகா படுகோன் குறித்த குணால் கேமுவின் கருத்தால் வெடித்தது சர்ச்சை
March 13, 2026

தாய்மை மற்றும் பணிநேரம் குறித்து தீபிகா படுகோனை மறைமுகமாக விமர்சித்த நடிகர் குணால் கேமுவின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்செயலாக தாய்மை அடைவது வேறு விஷயம் என்றும், திட்டமிடப்படாத தாய்மையால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறிய கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் குணால் கேமுவின் இந்த பேச்சு ‘பெண்ணியத்திற்கு எதிரானது’ என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெரிய நடிகர்களுக்கு இல்லாத நிபந்தனைகள், ஒரு தாய்க்கு மட்டும் ஏன் என கேள்வி எழுப்பியுள்ள ரசிகர்கள், தீபிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.