இன்புளுயன்சா வைரஸ் உருமாற்றம் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள வருடாந்திர தடுப்பூசி குறித்த அவசர எச்சரிக்கை
March 14, 2026

இன்புளுயன்சா வைரஸின் புதிய வகையான ‘சப்கிளான்ட் கே’ வேகமாக உருமாறி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. பறவைகள் மற்றும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ், எதிர்காலத்தில் பெரிய சுகாதார சீர்குலைவை ஏற்படுத்தக்கூடும். இது சாதாரண காய்ச்சல் மட்டுமல்லாமல் நிமோனியா மற்றும் இதய நோய்களையும் உண்டாக்கும் அபாயம் கொண்டது.
இந்த பாதிப்பைத் தடுக்க 6 மாதக் குழந்தைகள் முதல் 65 வயது முதியவர்கள் வரை அனைவரும் ஆண்டுதோறும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் இந்தத் தடுப்பூசிகள் ₹1500 முதல் ₹2200 வரை கிடைக்கின்றன. ஏப்ரல்-ஜூன் அல்லது செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் தடுப்பூசி போடுவது சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.