சாம்பியன் கொண்டாட்டத்தில் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டாரா சுப்மன் கில் பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை
March 14, 2026

2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மகுடம் சூடியது. இந்த வரலாற்று வெற்றிக்கு பிறகு சுப்மன் கில் சமூக வலைதளத்தில் பகிர்ந்த புகைப்படத்தில், தொடர் நாயகன் சஞ்சு சாம்சன் இல்லாதது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது சாம்சன் மீதான பொறாமையால் செய்யப்பட்ட செயல் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இருப்பினும், கில் வேண்டும் என்றே சஞ்சு சாம்சனை தவிர்க்கவில்லை என்பதே உண்மை. கொண்டாட்டத்தின் போது சாம்சன் மற்ற வீரர்களுக்கு பின்னால் நின்றதால் தற்செயலாக மறைக்கப்பட்டுள்ளார். இறுதிப்போட்டியில் 89 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவிய சாம்சனும், 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ராவும் இந்தியாவின் இந்த உலகக்கோப்பை கனவை நனவாக்கிய முக்கிய நாயகர்களாகத் திகழ்ந்தனர்.