44 வயதிலும் தோனியின் எனர்ஜி ரகசியம் என்ன மாணவர்களின் கேள்விக்கு கூல் பதில்

44 வயதிலும் தோனியின் எனர்ஜி ரகசியம் என்ன மாணவர்களின் கேள்விக்கு கூல் பதில்

ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட தயாராகி வரும் மகேந்திர சிங் தோனி, தனது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் ரகசியத்தை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் மாணவர்களுடனான உரையாடலில் பங்கேற்ற அவர், பைக் ஓட்டுதல், பேட்மிண்டன் மற்றும் பேடல் போன்ற விளையாட்டுகள் தன்னை மனதளவிலும் உடலளவிலும் ரீசார்ஜ் செய்ய உதவுவதாகத் தெரிவித்தார்.

இளம் வயதிலேயே மாணவர்கள் பலவிதமான விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும், அப்போதுதான் எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை அறிய முடியும் என்று அவர் அறிவுறுத்தினார். இதற்கிடையே, சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் இந்த சீசனில் தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், தோனி பேட்டிங் வரிசையில் முன்வரிசையில் வர வேண்டும் என புஜாரா வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *