ஈரான் இன்னும் பலமாகவே இருக்கிறது அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

ஈரான் இன்னும் பலமாகவே இருக்கிறது அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்குப் பிறகும் ஈரான் அரசு வலுவாகவே இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்ட போதிலும், அங்குள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆட்சியை முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். முக்கிய ராணுவ அமைப்பான ஐஆர்ஜிசி (IRGC) இன்னும் சிதறாமல் உறுதியாக இருப்பது அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கை அதிபர் டிரம்பிற்கு பெரும் அதிருப்தியை தந்துள்ளதாக கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் போரை நிறுத்த உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக டிரம்ப் சிக்கலில் உள்ளார். இஸ்ரேல் தரைவழி தாக்குதலைத் தொடங்க விரும்பினாலும், அதில் வெற்றி கிடைப்பது கடினம் என்றே உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஈரான் ஆட்சியாளர்கள் இப்போரை நீட்டிப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு கூடுதல் நெருக்கடி கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *