பேருந்து நிலையத்தில் கணவரை பக்கோடா வாங்க அனுப்பிவிட்டு மாயமான புதுப்பெண்
March 13, 2026

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, கணவரை பக்கோடா வாங்கி வரச் சொல்லிவிட்டு புதுப்பெண் ஒருவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 9 ஆம் தேதி தனது பிறந்த வீட்டிலிருந்து கணவருடன் திரும்பிக் கொண்டிருந்தபோது, பிலாரி பேருந்து நிலையத்தில் இந்த மர்மமான சம்பவம் நிகழ்ந்தது. கணவர் உணவு வாங்கச் சென்ற இடைவெளியில் அந்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தனது மனைவியைக் காணாமல் தவித்த கணவர் பிரீதம் சிங், நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகாரளித்துள்ளார். அந்தப் பெண் தனது காதலனுடன் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மாயமான புதுப்பெண்ணைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.