மெஸையாவின் வருகைக்காக போர் புரியும் இஸ்ரேல் மற்றும் எதிரிகளுக்கு நெதன்யாகுவின் நேரடி எச்சரிக்கை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில் ஆற்றிய உரை மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் புதிய தலைவர் மோஜ்தபா கமேனி மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம் ஆகியோருக்கு நேரடி கொலை மிரட்டல் விடுத்த அவர், எவருக்கும் உயிர் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார். இஸ்ரேலின் ராணுவ பலம் பிராந்தியத்தின் வரைபடத்தையே மாற்றி வருவதாகவும் அவர் பெருமிதம் கொண்டார்.
யூத மத நம்பிக்கையின்படி, உலகை மீட்க வரும் புனிதத் தூதரான ‘மெஸையா’ வரும் வரை இஸ்ரேலின் போர் ஓயாது என நெதன்யாகு ஆன்மீக ரீதியாக முழங்கினார். தற்போதைய வெற்றிகள் அனைத்தும் அந்தப் புனித வருகைக்கான முன்னோட்டம் என அவர் சித்தரிக்கிறார். மதக் குறியீடுகளைப் பயன்படுத்தி அவர் விடுத்துள்ள இந்தத் தீவிரமான அறிவிப்பு, ஏற்கனவே பதற்றத்தில் உள்ள மத்திய கிழக்கை ஒரு தீர்க்கதரிசனப் போரை நோக்கித் தள்ளுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.