ஈரான் போர் எதிரொலி: எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கிய அண்டை நாடுகள், இந்தியாவின் உதவியை நாடும் இலங்கை, வங்கதேசம்
March 13, 2026

ஈரான் மற்றும் இஸட்ரேல் இடையேயான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் வங்கதேசம், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் தற்போது இந்தியாவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த நாடுகளின் கோரிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியா குழாய் வழித்தடம் மூலம் வங்கதேசத்திற்கு 5,000 டன் டீசலை வழங்கியுள்ள நிலையில், கூடுதல் விநியோகம் குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடியில் உள்ள இந்த நாடுகள், போர்க்கால சூழலில் தங்களின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவின் நட்புக்கரத்தையே முழுமையாக நம்பியுள்ளன.