ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு நாளை தமிழக அரசு நடத்தும் சிறப்பு முகாம்
March 13, 2026

தமிழகம் முழுவதும் நாளை மார்ச் 14-ம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டலங்கள் மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.
இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் செல்போன் எண் பதிவு போன்ற சேவைகளை உடனுக்குடன் பெற முடியும். மேலும், கடைக்கு வர இயலாத முதியோருக்கான அங்கீகாரச் சான்று மற்றும் நியாய விலைக் கடைகள் குறித்த புகார்களுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.