வீட்டில் அளவுக்கு அதிகமாக எரிவாயு சிலிண்டர்களை சேமித்து வைத்தால் சிறை தண்டனை உறுதி

வீட்டில் அளவுக்கு அதிகமாக எரிவாயு சிலிண்டர்களை சேமித்து வைத்தால் சிறை தண்டனை உறுதி

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தால் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே சிலிண்டர்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும், விநியோகம் சீராக இருக்கும் என மத்திய அரசு உறுதியளித்துள்ள நிலையில், சிலிண்டர்களை சேமித்து வைப்பதற்கான சட்ட விதிமுறைகளை அறிவது அவசியமாகும்.

அரசு விதிமுறைப்படி, ஒரு குடும்பம் அதிகபட்சமாக இரண்டு 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை மட்டுமே வைத்திருக்க முடியும். பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அளவுக்கு அதிகமாக சிலிண்டர்களை பதுக்கி வைப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த விதிகளை மீறுவோருக்கு மூன்று மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *