தலைையணை இல்லாமல் தூங்குவதால் இவ்வளவு நன்மைகளா முதுகு வலி மற்றும் சருமப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி
March 13, 2026

தலைையணை இல்லாமல் தூங்குவது கழுத்து மற்றும் முதுகெலும்பைச் சீராக வைக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக குப்புறப் படுத்துத் தூங்குபவர்களுக்கு இது முதுகு வலியைத் தணிக்கச் சிறந்த வழியாகும். தவறான தலைையணையைப் பயன்படுத்துவது தசைப் பிடிப்பு மற்றும் உடல் நிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் சரியான தூக்க முறை அவசியம்.
உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் பருக்கள் வராமல் தடுக்கவும் இது உதவுகிறது. குழந்தைகளுக்குத் தலைையணை தவிர்ப்பது ‘பிளாட் ஹெட் சிண்ட்ரோம்’ அபாயத்தைக் குறைக்கும். இருப்பினும் உடல்நிலை சார்ந்து ஏதேனும் மாற்றங்களைச் செய்யும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.