சதத்தை விட அணியின் வெற்றியே முக்கியம் பயிற்சியாளரிடம் சஞ்சு சாம்சன் கொடுத்த நெகிழ்ச்சியான பதில்
March 13, 2026

2026 டி20 உலகக் கோப்பை தொடரின் நாயகன் சஞ்சு சாம்சன், தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் வெற்றியே முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார். ஒரு சதமாவது அடிக்குமாறு பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் அறிவுறுத்தியபோது, “அணிக்காக ஆடும்போது தனிப்பட்ட ரன்கள் எப்படி சாத்தியம்?” என்று சஞ்சு பதிலளித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 97 ரன்களும், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் தலா 89 ரன்களும் குவித்த சஞ்சு, சதத்தை நெருங்கியபோதும் அதிரடியைக் குறைக்கவில்லை. தனது தனிப்பட்ட மைல்கல்லைத் தவிர்த்து, அணியின் மகுடத்திற்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பை பயிற்சியாளர் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.