கூட்டணி கட்சிகளின் பெயர்களைச் சொன்னால் நிர்வாணமாக நடக்கத் தயார்! ஸ்டாலினுக்கு நாஞ்சில் சம்பத் பகிரங்க சவால்

கூட்டணி கட்சிகளின் பெயர்களைச் சொன்னால் நிர்வாணமாக நடக்கத் தயார்! ஸ்டாலினுக்கு நாஞ்சில் சம்பத் பகிரங்க சவால்

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக பொதுக்கூட்டத்தில் பேசிய பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், திமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணியில் உள்ள 24 கட்சிகளின் பெயர்களைத் திக்காமல் கூறிவிட்டால், தான் நிர்வாணமாக நடக்கத் தயார் என அதிரடி சவால் விடுத்தார். மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் பாணியை முதல்வர் நகலெடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

திமுக மற்றும் அதிமுக இடையே ‘கள்ள உறவு’ இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். தவெக யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்றும், மக்களின் நலனுக்காக மட்டுமே களமிறங்கியுள்ளதாகவும் அவர் தனது உரையில் ஆவேசமாகத் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *