ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு

ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களால் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா நோக்கி வந்த ‘மயூரி நாரி’ என்ற தாய்லாந்து சரக்குக் கப்பல் தாக்கப்பட்டதை அடுத்து, தாய்லாந்து அரசு ஈரான் தூதருக்குச் சம்மன் அனுப்பியுள்ளது. வணிகக் கப்பல்கள் மீதான இத்தகைய தாக்குதல்களை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, கடல்சார் வணிகச் சுதந்திரத்தை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளது.

ஈராக் கடல் பகுதிக்கு அருகே அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மார்ச் 11 அன்று ஒரே இரவில் ஐந்து கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி முதல் இதுவரை 20 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன, இதில் மொத்தம் மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொடர் தாக்குதல்கள் சர்வதேச கடல்வழிப் பாதுகாப்பில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *