தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்த குற்றங்கள் உள்துறை செயலர் வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரம்
March 13, 2026

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கூறி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மாநில உள்துறை செயலர் தீரஜ் குமார் முக்கிய விளக்கமளித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 422-லிருந்து 401-ஆகக் குறைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், புகார்களைத் தெரிவிக்க பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டார். குற்றங்கள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்குத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் பாதுகாப்பே அரசின் முன்னுரிமை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.