32 ஆண்டுகளாகத் தணியாத மகாநதி படத்தின் அந்த வேதனையும் ஆவேசமும்
March 13, 2026

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் கொடூரமான குற்றச்சம்பவங்கள் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் மிகுந்த ஆவேசத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
சமூக இழிவுகளைக் கண்டு 32 ஆண்டுகளுக்கு முன்பு தான் ‘மகாநதி’ படத்தில் வெளிப்படுத்திய கோபம் இன்னும் தணியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க முடியாத சமூகத்தை ஒருபோதும் நாகரீக சமுதாயமாக கருத முடியாது என்றும் அவர் சாடியுள்ளார்.