பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் சீமான் அதிரடி முழக்கம்
March 13, 2026

தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பெருகி வரும் போதைப்பொருள் புழக்கமே இத்தகைய கொடூரமான குற்றங்கள் அரங்கேறக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் சென்னையில் நடந்த பாலியல் அநீதிகளைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய தமிழக அரசைக் கடுமையாகச் சாடினார். பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அவர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.