கழுதை வளர்ப்புக்கு 50 லட்சம் ரூபாய் மத்திய அரசு மானியம் மற்றும் கைநிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு

இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை 60 சதவீதம் வரை குறைந்துள்ளதால், அவற்றை பாதுகாக்க மத்திய அரசின் ‘தேசிய கால்நடை மிஷன்’ புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் கழுதை பண்ணை அமைப்பவர்களுக்கு மொத்த செலவில் 50 சதவீதம், அதாவது அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. தனிநபர்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தொழில் முனைவோராக மாற மத்திய அரசு வழிவகை செய்கிறது.
சந்தையில் ஒரு லிட்டர் கழுதைப் பால் 5,000 ரூபாய் வரை விற்கப்படுவதால், இதன் மூலம் மாதம் 2 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும். இப்பாலை அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவத் தேவைக்காக பயன்படுத்த பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 50 பெண் கழுதைகள் மற்றும் 5 ஆண் கழுதைகளை வளர்க்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டு இனக் கழுதைகளை வளர்ப்பதை ஊக்குவிக்கவே இந்த முதலீட்டு உதவி வழங்கப்படுகிறது.