மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு விசாரணை 60 நாட்களில் முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி
March 12, 2026

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீயோன் நகரைச் சேர்ந்த ஆகாஷ், போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும், தவறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.