பாரசீக வளைகுடாவில் ரத்த ஆறு ஓடும் டிரம்ப்புக்கு ஈரான் நாடாளுமன்றம் கடும் எச்சரிக்கை

பாரசீக வளைகுடாவில் ரத்த ஆறு ஓடும் டிரம்ப்புக்கு ஈரான் நாடாளுமன்றம் கடும் எச்சரிக்கை

பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரான் தீவுகள் மீது தாக்குதல் நடத்தினால் ஆக்கிரமிப்பாளர்களின் ரத்தத்தால் வளைகுடா நிரம்பும் என ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முகமது பகேர் கலிபஃப் எச்சரித்துள்ளார். நாட்டின் இறையாண்மையை காக்க அனைத்து எல்லைகளையும் கடந்து ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மோதலால் அமெரிக்க வீரர்களுக்கு ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அதிபர் டிரம்ப் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என அவர் சாடியுள்ளார்.

ஈரானின் கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்கா முயற்சிப்பதாக வெளியான தகவலையடுத்து இந்த மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், சர்வதேச நாடுகள் இந்த மோதலை கூர்ந்து கவனித்து வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *