சென்னையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஊழியர்களுக்கு ஹெச்சிஎல் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
March 12, 2026

சென்னையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்கள் முடங்கியுள்ளதை அடுத்து, ஹெச்சிஎல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பை வழங்கியுள்ளது. கேன்டீன்களில் உணவு தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஊழியர்களின் நலன் கருதி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அலுவலகப் பேருந்துகளை இயக்குவதிலும் சிக்கல் நேரலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மிக முக்கியமான பணிகளில் இருக்கும் பணியாளர்கள் மட்டும் நேரடியாக அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என அந்த நிறுவனம் மின்னஞ்சல் மூலம் அறிவுறுத்தியுள்ளது.