பாரசீக வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் இந்திய மாலுமி உயிரிழப்பு

பாரசீக வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் இந்திய மாலுமி உயிரிழப்பு

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவிற்கு சொந்தமான இரு பெரும் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். ஈராக்கின் அல் பாவ் துறைமுகத்திற்கு அருகே ‘செப்சி விஷ்ணு’ என்ற கப்பலில் நிகழ்ந்த இந்த மர்ம வெடிப்பிற்கு நீருக்கடியில் வந்த ட்ரோன்கள் அல்லது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகுகள் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வெடி விபத்தால் கப்பல்கள் தீப்பிழம்புகளாக மாறி கடலில் கரும்புகை சூழ்ந்தது.

தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்து 38 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட போதிலும், துரதிர்ஷ்டவசமாக அந்த இந்திய மாலுமியை காப்பாற்ற முடியவில்லை. பாதிக்கப்பட்ட கப்பல்களில் இருந்த சுமார் 4 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கடலில் கலந்திருப்பதால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஓமன் கடற்கரையைத் தொடர்ந்து வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தொடர் தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *