பிரதமர் மோடியே பயத்தில் இருப்பதாக ராகுல் காந்தி கடும் விமர்சனம்

பிரதமர் மோடியே பயத்தில் இருப்பதாக ராகுல் காந்தி கடும் விமர்சனம்

நாடெங்கும் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தின் போது ராகுல் காந்தி பிரதமரைச் சாடினார். மக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுரை கூறும் பிரதமர் மோடியே, அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடும் அச்சத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களவைக்கு வரக்கூட பிரதமர் அஞ்சுவதாகக் கூறிய ராகுல், சர்வதேசப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார். வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள தோல்விகளே இந்தத் தட்டுப்பாட்டிற்கு முக்கியக் காரணம் என்று காங்கிரஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *