ஆட்டோ எல்பிஜியை சமையல் சிலிண்டரில் நிரப்பினால் வெடிக்க வாய்ப்புள்ளதா நிபுணர்கள் சொல்லும் அதிரடி உண்மை

ஈரான் போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க, பலர் ஆட்டோ எல்பிஜியை வீட்டு சிலிண்டர்களில் நிரப்புகின்றனர். இது ஆபத்தானது என நிபுணர் முனைவர் வளவன் அமுதன் எச்சரிக்கிறார். சமையல் எரிவாயுவில் புரொப்பேன் மற்றும் பியூட்டேன் 40:60 என்ற விகிதத்தில் இருக்கும். ஆனால் ஆட்டோ எல்பிஜியில் இது 60:40 என இருப்பதால் அதிக அழுத்தத்தை உருவாக்கும். இது வீட்டு உபயோக அடுப்பு மற்றும் ரெகுலேட்டர்களில் தீ விபத்தை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் சிலிண்டர் நிரப்பப்படும்போது பாதுகாப்பு சீல் இடப்படும். ஆனால் ஆட்டோ எல்பிஜி பங்குகளில் இத்தகைய பாதுகாப்பு சோதனைகள் கிடையாது. கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக எரிவாயு கசிவு ஏற்பட்டு பெரும் விபத்துக்கள் நேரிட வாய்ப்புள்ளது. எனவே, சட்டவிரோதமான மற்றும் பாதுகாப்பற்ற முறையில் சிலிண்டர்களை நிரப்புவதைத் தவிர்த்து, உயிரிழப்புகளைத் தடுப்பதே சிறந்தது.