சென்னையில் புராஜெக்ட் பணிக்காக வந்த திருச்சி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் புராஜெக்ட் பணிக்காக வந்த திருச்சி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் தங்கி புராஜெக்ட் பணிகளை மேற்கொண்டு வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது மாணவி, மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக, மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை காட்டி அந்த மாணவியை மர்ம நபர்கள் மிரட்டியுள்ளனர். கடந்த 9-ஆம் தேதி மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட மாணவி, ஒரு மணி நேரத்திற்கு பிறகு வேறு இடத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *