விஜய்யின் மக்கள் செல்வாக்கை முடக்க சதியா தமிழ்நாடு முழுவதும் தவெக-வினர் அதிரடி போராட்டம்
March 12, 2026

தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் நோக்கில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாநிலம் தழுவிய போராட்டம் வெடித்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் அரசின் நடவடிக்கையை கண்டித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை முன்வைத்தும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தவெகவினர் திரண்டுள்ளனர்.
பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். விஜய்யின் அரசியல் வளர்ச்சியை தடுக்கவே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அக்கட்சியினர், ஜனநாயகமற்ற இந்த நடைமுறைகளை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டு வருகின்றனர்.