விஜய் த்ரிஷா சந்திப்பால் அரசியலில் சலசலப்பு இனி முட்டு கொடுக்க முடியாது என அந்தணன் எச்சரிக்கை
March 12, 2026

தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், நடிகை த்ரிஷாவுடன் சமீபத்திய நிகழ்வில் அவர் பங்கேற்றது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இருவரும் ஒரே நிற உடையில் பொது நிகழ்ச்சியில் தோன்றியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது, இது அவரது அரசியல் பயணத்திற்கு பின்னடைவாக அமையலாம் என கருதப்படுகிறது.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறுகையில், அரசியல் கூட்டணி குறித்து எதிர்பார்த்த வேளையில், த்ரிஷாவுடனான இந்த சர்ச்சைகள் விஜய்யின் பிம்பத்தை பாதிக்கும் என்றார். இதுவரை விஜய்க்கு ஆதரவாகப் பேசி வந்தவர்கள் கூட, இனி வரும் காலங்களில் இதுபோன்ற தனிப்பட்ட விவகாரங்களுக்கு முட்டு கொடுக்க முடியாது என அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.