மகள் கிம் ஜூ ஏ உடன் ஏவுகணை சோதனையை நேரில் ஆய்வு செய்த கிம் ஜோங் உன்

மகள் கிம் ஜூ ஏ உடன் ஏவுகணை சோதனையை நேரில் ஆய்வு செய்த கிம் ஜோங் உன்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது 13 வயது மகள் கிம் ஜூ ஏ உடன் இணைந்து ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்டார். அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டுப் போர் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடற்படைப் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இலக்குகளை துல்லியமாகத் தாக்கின. எதிர்கால தலைவராக கிம் ஜூ ஏ முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தென்கொரியா கணித்துள்ளது. அதேவேளை, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா மீண்டும் எச்சரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *