ஹார்மூஸ் நீரிணை அருகே ஈரான் நடத்திய சரமாரி தாக்குதலில் 2 இந்தியர்கள் பலி
March 12, 2026

ஹார்மூஸ் நீரிணை பகுதியில் பயணித்த தாய்லாந்து, பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் நாட்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் தாய்லாந்திலிருந்து குஜராத் நோக்கி வந்த கப்பலில் இருந்த 23 பேரில் 2 இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றத்தால் இந்த முக்கிய கடல்வழி பாதையை ஈரான் மூடியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தற்போது 7 வார இருப்பு உள்ள போதிலும், போர் நீடித்தால் இந்தியா பெரும் பொருளாதார சவால்களை சந்திக்க நேரிடும்.