சிவகங்கை குட்டையன்பட்டி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா உற்சாகம்
March 11, 2026

கோடைகாலம் தொடங்குவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் குட்டையன்பட்டி கிராம கண்மாயில் நீர் வற்றத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய மீன்பிடி திருவிழாவைக் கொண்டாடினர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வலை மற்றும் கச்சால்களைப் பயன்படுத்தி ஆர்வத்துடன் மீன்பிடித்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த விழாவில் பிடிப்பட்ட மீன்களை மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது வீடுகளுக்கு அள்ளிச் சென்றனர். வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு கிராமப்புற நீர்நிலைகளிலும் இது போன்ற மீன்பிடித் திருவிழாக்கள் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.