ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி படைத்த அசைக்க முடியாத 10 சாதனைகள்

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி படைத்த அசைக்க முடியாத 10 சாதனைகள்

மார்ச் 28 முதல் தொடங்கவுள்ள 2026 ஐபிஎல் தொடருக்காக ஆர்சிபி நட்சத்திரம் விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த சீசனில் 17 ஆண்டு கால கனவை நனவாக்கி கோப்பையை வென்ற ஆர்சிபி அணி, இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க முனைப்பு காட்டி வருகிறது. ஐபிஎல் தொடக்கம் முதல் இன்று வரை ஒரே அணிக்காக விளையாடி வரும் ஒரே வீரர் என்ற பெருமை கோலிக்கு மட்டுமே உண்டு.

இதுவரை 267 போட்டிகளில் 8600 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றின் ரன் மெஷினாக இவர் திகழ்கிறார். ஒரு சீசனில் 973 ரன்கள், ஒட்டுமொத்தமாக 8 சதங்கள் மற்றும் 67 அரைசதங்கள் என பேட்டிங்கில் பல இமாலய சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக சின்னசாமி மைதானத்தில் மட்டும் 154 சிக்ஸர்கள் விளாசி, ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக சிக்ஸர் அடித்த வீரராகவும் கிங் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *