திமுகவை வீழ்த்த விஜய்க்கு அழைப்பு விடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி

திமுகவை வீழ்த்த விஜய்க்கு அழைப்பு விடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி

தூத்துக்குடி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, திமுகவை வீழ்த்துவதே அதிமுகவின் முக்கிய கொள்கை என்று கூறினார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் இதே நிலைப்பாட்டை கொண்டிருப்பதால், வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்று கூறிய ராஜூ, கூட்டணி குறித்த இறுதி முடிவை அந்தந்த கட்சிகளே எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *