கோவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிய நர்ஸ் மற்றும் திமுக பிரமுகர் சஸ்பெண்ட்

கோவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிய நர்ஸ் மற்றும் திமுக பிரமுகர் சஸ்பெண்ட்

கோவை வடவள்ளி நகர்ப்புற சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியை தனது குடும்பத்துடன் தங்கும் வீடாக மாற்றிய நர்ஸ் கனிதா அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவரது கணவர் திமுக பிரமுகர் என்பதால், அதிகார பலத்தைப் பயன்படுத்தி அரசு கட்டிடத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி சமூக ஆர்வலர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், சிகிச்சை அளிக்க வேண்டிய இடங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த மையம் தற்போது துணை சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு, சிகிச்சை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே தடுப்புச்சுவர் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தவறுகளைக் கவனிக்கத் தவறிய மாநகராட்சி அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *