உணவில் கலக்கும் விஷம் மற்றும் ஐதராபாத் இஞ்சி பூண்டு பேஸ்ட் தொழிற்சாலையில் அதிரடி வேட்டை

உணவில் கலக்கும் விஷம் மற்றும் ஐதராபாத் இஞ்சி பூண்டு பேஸ்ட் தொழிற்சாலையில் அதிரடி வேட்டை

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அழுகிய இஞ்சி, பூண்டுடன் அபாயகரமான அசிட்டிக் அமிலம் மற்றும் செயற்கை நிறமிகளை கலந்து பேஸ்ட் தயாரித்த பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹபீப் நகர் பகுதியில் உள்ள முகமது பரூக் என்பவரது தொழிற்சாலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் 1000 கிலோவிற்கும் அதிகமான தரம் குறைந்த இஞ்சி பூண்டு பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் இந்த நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் சிறிய கடைகள் முதல் பெரிய உணவகங்கள் மற்றும் மொத்த விற்பனை சந்தை வரை விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த இந்த கும்பலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *