போர்முனையில் தவித்த 169 இந்தியர்களை துணிச்சலுடன் மீட்ட இளம் விமானி தீபிகா அதானா

போர்முனையில் தவித்த 169 இந்தியர்களை துணிச்சலுடன் மீட்ட இளம் விமானி தீபிகா அதானா

ஐக்கிய அரபு அமீரகத்தின் போர்ச் சூழலில் சிக்கித் தவித்த 169 இந்திய பயணிகளை 23 வயது இளம் விமானி தீபிகா அதானா பத்திரமாக தாயகம் அழைத்து வந்தார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இந்த மீட்புப் பணியில் கேப்டன் ஜஸ்விந்தர் கவுர் தலைமையில் முழுவதுமாக பெண் ஊழியர்களே பங்கேற்றனர். கடந்த மார்ச் 6 ஆம் தேதி ராஸ் அல் கைமா விமான நிலையத்திலிருந்து உயிரைப் பணயம் வைத்து இந்த சவாலான பயணத்தை அவர் மேற்கொண்டார்.

பயணத்தின் போது விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இருப்பினும், மன உறுதியுடன் செயல்பட்டு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார். 2024 இல் பணியில் சேர்ந்த தீபிகாவின் இந்த வீரச் செயலைப் பாராட்டி, நெகிழ்ச்சியடைந்த பயணிகள் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *