போலீஸ் சித்திரவதையால் உயிரிழந்த ஆகாஷ் அளித்த அதிரடி வாக்குமூலம்

மானாமதுரை பொறியாளர் ஆகாஷ் உயிரிழப்பதற்கு முன் அளித்த வாக்குமூலம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் பிடியில் இருந்தபோது, தனது கண்களைக் கட்டி, காலில் ஈரச் சாக்கைப் போட்டு இரும்புக் கம்பியால் தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போலீஸார் மிரட்டியதால் மருத்துவமனையில் தவறி விழுந்ததாகப் பொய் சொன்னதாகவும், இந்தத் தாக்குதலால் எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்தம் வெளியேறியதாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த மரணத்தைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த நான்கு நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், தலித் இளைஞரான ஆகாஷ் மீதான இந்தத் தாக்குதல் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது எஸ்சி-எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய சிபிசிஐடி-க்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.