சிலிண்டர் தட்டுப்பாட்டால் டெல்லி உயர்நீதிமன்ற கேன்டீன் மூடல் வழக்கறிஞர்கள் தவிப்பு
March 11, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு கூறினாலும், டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்திலேயே கேஸ் கிடைக்காததால் உணவகம் மூடப்பட்டுள்ளது. இதனால் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கிய உணவுகள் மெனுவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் உணவகங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லியிலும் இந்த தாக்கம் எதிரொலிக்கிறது. எரிவாயு விநியோகம் எப்போது சீராகும் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என கேன்டீன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.